உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்று நாள் மழைக்கு வாய்ப்பு கலக்கத்தில் நெல் விவசாயிகள்

மூன்று நாள் மழைக்கு வாய்ப்பு கலக்கத்தில் நெல் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலால் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சில பகுதிகளில் அறுவடை பணிகள் நடக்கின்றன. குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளான ஆனந்துார், கூடலுார், நத்தக்கோட்டை, திருத்தேர்வளை, கருங்குடி, ஏ.ஆர்.மங்கலம், காவனக்கோட்டை, வண்டல், வரவணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை நடக்கிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் சேதமடைவதுடன், அறுவடை நெல் வயல்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மேலும் 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அறுவடை நடந்து வரும் நிலையில் மழை பெய்தால் முழுமையாக நெற்கதிர்கள் பாதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ