மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
10 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
10 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
10 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி 10, 11-வது வார்டு இந்திராநகர், தாயுமான சுவாமி கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கியுள்ளது. இங்கு குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ராமநாதபுரம் நகரில் பெயரளவில் நடக்கும் பாதாள சாக்கடை பராமரிப்பு பணியால் குழாய்கள் சேதமடைந்தும், அடைப்பு ஏற்பட்டும் கழிவுநீர் ரோட்டில் தேங்குவது வாடிக்கையாகி உள்ளது. தற்போது 10, 11வது வார்டிற்கு உட்பட்ட இந்திராநகர், தாயுமானசுவாமி கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் 6 மாதங்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் கழிவுநீர் கலந்தகுடிநீருடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அப்போது உடனடியாக கழிவுநீரை வெளியேற்றி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.நடவடிக்கை எடுக்கா விடில் வீட்டுவரி, குடிநீர் வரி செலுத்த மாட்டோம். பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர். பொதுமக்களுடன் நகராட்சித் தலைவர் கார்மேகம் பேச்சுவார்த்தை நடத்தினார். கழிவுநீரை வெளியேற்றவும், விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் எனக் கூறினார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago