உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரம் கோயிலில் சொக்கப்பனை விழா

 ராமேஸ்வரம் கோயிலில் சொக்கப்பனை விழா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் சொக்கப்பனைக்கு தீ வைத்து கார்த்திகை தீப விழா கொண்டாடினர். கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரதவீதியில் சுவாமி மற்றும் அம்மன் சன்னதி எதிரே இரு சொக்கப்பனைகளை கோயில் நிர்வாகம் நிறுவியது. இரவு 7:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி ரதவீதியில் எழுந்தருளினர். பின் குருக்கள் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை செய்ததும், சொக்கப்பனைக்கு தீ மூட்டி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதன்பின் தீ மளமளவென எரிந்ததும், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை