தொண்டி வார்டுகளில் சிறப்பு கூட்டம்
தொண்டி: தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மூன்று கட்டமாக குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு தலைமை வகித்தார். செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரித்தல், சாலைகள், மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்ற பல்வேறு தேவைகளை நிறைவேற்ற எடுத்துரைத்தனர். பொதுமக்களிடமிருந்து 70க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு தெரிவித்தார்.