உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பசும்பொன்னில் பூஜாரியை தாக்கிய ஸ்ரீதர் வாண்டையார்

பசும்பொன்னில் பூஜாரியை தாக்கிய ஸ்ரீதர் வாண்டையார்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தேவர் சிலை முன்பு பூஜாரியை ஸ்ரீதர் வாண்டயைார் கன்னத்தில் அறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மரியாதை செலுத்த வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறிது காத்திருக்குமாறு பூஜாரி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் வாண்டையார் நீ எல்லாம் யாரு, என்னை கேள்வி கேட்க எனக்கூறி அவரை கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து ஸ்ரீதர் வாண்டையார் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் எழுந்து செல்லவில்லை. அப்போது மரியாதை செலுத்த வந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் ஆகியோர் ஸ்ரீதர் வாண்டையாரை சமாதானப்படுத்தினர். அதன் பிறகு அவர் புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை