உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மரங்களில் உள்ள ஆணியை அகற்றி மருந்துபூசி பாதுகாக்கும் எஸ்.எஸ்.ஐ.

மரங்களில் உள்ள ஆணியை அகற்றி மருந்துபூசி பாதுகாக்கும் எஸ்.எஸ்.ஐ.

கீழக்கரை: -ராமநாதபுரம் பொருளாதார குற்றவியல் எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழக்கரை, திருப்புல்லாணியில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றினார். அவ்விடத்தில் மஞ்சள், வேப்ப எண்ணையை வைத்து மருந்துபூசி வருகிறார்.ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை, திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப்பதாகைகளை ஆணி அடித்து வைத்து உள்ளனர்.அவற்றினை சுபாஷ் சீனிவாசன் அகற்றிவிட்டு மரத்திற்கு மருந்து இடுவதற்கு மஞ்சள் மற்றும் வேப்ப எண்ணையை வைத்து பூசி வருகிறார்.எஸ்.எஸ்.ஐ. சுபாஷ் சீனிவாசன் கூறுகையில், மரங்களின் வளர்ச்சிக்கு தடை ஏற்படும் நடுப்பகுதியில் நீண்ட ஆணியை வைத்து விளம்பர பதாகைகள் வைக்கின்றனர். எனது ஓய்வு நேரத்தில் மரங்களில் ஆணியை அகற்றுகிறேன். மரங்களில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், வனத்துறை, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை