உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் திருட்டு 

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் திருட்டு 

திருவாடானை: திருவாடானை அருகே மேலக்கைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகநாதன் 50. இவருக்கு சொந்தமான வயலில் நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் கடம்பாகுடி மூர்த்தி 40, செக்காலையை சேர்ந்த கல்யாணசுந்தரம் 44, சதாசிவம் 46, திருமுருகன் 47, ஆகியோர் அறுவடை இயந்திரம் மூலம் அந்த நெற்கதிர்களை நேற்று முன்தினம் இரவு அறுத்து சென்றனர். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 80 மூடை நெற்கதிர்களை திருடிச் சென்றுவிட்டதாக நாகநாதன் கொடுத்த புகாரில், திருவாடானை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ