மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
11 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
11 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
11 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
11 hour(s) ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் எஸ்.எஸ்.ஏ., அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டாவிட்டால் உண்ணாவிரதம் இருக்க எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.இப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 14 ஆசிரியர்கள் உள்ளனர். திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வருகின்றனர். வகுப்பறை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த நிலையில் இருந்ததால் வகுப்பறை கட்டடம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.அங்கு மீண்டும் வகுப்பறை கட்டாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தொகுதி தலைவர் அப்துல் வஹாப் கூறியதாவது:இங்கு 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் இட பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். முன்பிருந்த கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளதால் அவ்விடத்தில் காலி இடமாக உள்ளது. மாணவர்கள் மரத்தடி நிழலில் கல்வி பயிலும் நிலை உள்ளது.மழைக்காலங்களில் சிரமப்படுகின்றனர். எனவே அடுக்குமாடி கட்டமைப்பு கொண்ட வகுப்பறை தேவை குறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். முதன்மை கல்வி அலுவலரிடம் இது குறித்து கேட்டதற்கு நபார்டு வங்கி மூலம் தொகை பெறப்பட்டவுடன் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கட்டடம் கட்டப்படும் என்றார்.கட்டடம் கட்ட காலதாமதம் ஏற்படுமானால் பெற்றோர் மற்றும் பொதுமக்களை திரட்டி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago