உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மங்களக்குடியில் துணை வேளாண்மை மையம்

மங்களக்குடியில் துணை வேளாண்மை மையம்

திருவாடானை : திருவாடானை அருகே மங்களக்குடியில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாடானை பாரதிநகரில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. கட்டடத்தின் மேல் பகுதியில் தோட்டக்கலை துறை அலுவலகம் உள்ளது. மங்களக்குடி, புல்லுார், தொண்டி, திருவாடானை ஆகிய பிர்காக்களை சேர்ந்த 57 வருவாய் கிராம விவசாயிகள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக 40 கி.மீ., துாரத்தில் உள்ள மங்களக்குடி ஊராட்சி கிராம விவசாயிகள் இங்கு வந்துசெல்ல சிரமப்படுகின்றனர். இது குறித்து மங்களக்குடி ஊராட்சி தலைவர் அப்துல்ஹக்கீம் கூறுகையில், திருவாடானைக்கு சென்று வர விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மங்களக்குடி, புல்லுார் ஆகிய பிர்காக்களில் உள்ள வருவாய் கிராமங்களை பிரித்து மங்களக்குடியில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை