உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெடுஞ்சாலையில் பழுதான மின் விளக்குகள்  பல நாட்களாகியும்  மாற்ற மனம் இல்லையே

நெடுஞ்சாலையில் பழுதான மின் விளக்குகள்  பல நாட்களாகியும்  மாற்ற மனம் இல்லையே

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நான்கு வழிச்சாலையில் பட்டணம்காத்தான், சக்கரகோட்டையில் சென்டர் மீடியன் இடையே மின்விளக்குகள் அமைத்துள்ளனர். இவற்றை பெயரளவில் பராமரிப்பு செய்வதால் பாதிக்கும் மேற்பட்ட விளக்குகள் எரிவதில்லை.குறிப்பாக மதுரை ரோடு பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப் அருகே 10க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளன. குமரய்யா கோயில் அருகிலும், பாரதி நகர் பகுதி, கலெக்டர் அலுவலகம் அருகில் 50க்கும் மேற்பட்ட விளக்குகள் எரியவில்லை.இதனால் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பழுதான மின் விளக்குகளை அகற்றி புதிதாக மாற்ற சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை