உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நிதி ஒதுக்கீடு செய்யாததால்கிராம இணைப்பு ரோடுகள் மோசம் திருவாடானை எம்.எல்.ஏ., பேட்டி

நிதி ஒதுக்கீடு செய்யாததால்கிராம இணைப்பு ரோடுகள் மோசம் திருவாடானை எம்.எல்.ஏ., பேட்டி

திருவாடானை: திருவாடானை தொகுதியில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் கிராம இணைப்பு ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் கூறினார்.திருவாடானையில் அவர் கூறியதாவது:திருவாடானை தொகுதியில் பெரும்பாலான கிராமப்புறங்களில் செல்லும் இணைப்பு ரோடுகள் சேதமடைந்துள்ளது. அரசு நிதி ஒதுக்கினாலும் தேவை அதிகமாக இருப்பதால் ரோடுகளை சீரமைக்கமுடியவில்லை. நெடுஞ்சாலைத்துறை சார்பில் மட்டும் சில ரோடுகள் சீரமைக்கப்பட்டுள்ளது.எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் முழுமையான பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. தொண்டியில் பஸ் டிப்போ அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. விரைவில் பணிகள் துவங்கும்.சட்டசபை கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினேன். அதில் திருவாடானை தொகுதி பனைக்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும். நெல் விலையைக் காட்டிலும் உரம் விலை அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நெல் ஆதார விலையை உயர்த்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். மீன்பிடி தொழிலை வாழ்வாதரமாக கொண்ட அனைத்து மீனவர்களுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது. எனவே ஹிந்து அறநிலையத்துறை சார்பில் திருமணமண்டபம் கட்ட வேண்டும். போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை