உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் டிட்டோஜாக் உண்ணாவிரத போராட்டம் 

ராமநாதபுரத்தில் டிட்டோஜாக் உண்ணாவிரத போராட்டம் 

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு இயக்கங்களின்(டிட்டோஜாக்) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முனியசாமி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லாரன்ஸ் முன்னிலை வகித்தனர். அருள்செழியன் வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைச்செயலாளர் தமிழ்செல்வன் துவக்கி வைத்தார். அனைத்து சங்க நிர்வாகிகள் பேசினர். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் குணசேகரன் முடித்து வைத்து பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப்பொருளாளர் கதிரவன் நன்றி கூறினார். போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர், இடை நிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை மறுக்கும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் அரசு ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி அதற்கான ஆணையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை