உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நெற்பயிர் மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி

 நெற்பயிர் மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பேராவூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தில், நெற்பயிரில் சூழ்நிலை மேலாண்மை குறித்து பண்ணைப்பள்ளி விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. மாவட்ட வேளாண் துணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் உதவி இயக்குநர் அம்பேத்குமார் முன்னிலை வகித்தார். உழவன் செயலியின் பயன்பாடுகள், வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய விபரங்கள் குறித்து விவசாயிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வேளாண்மை அலுவலர்கள் சீதாலெட்சுமி, ரவிச்சந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜேஸ்குமார், அபிநாஸ்ரீ, கோசலாதேவி உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி