உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இன்றும் நாளையும் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் தீவிர திருத்த உதவி மையம்

 இன்றும் நாளையும் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் தீவிர திருத்த உதவி மையம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 ஓட்டுச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் (நவ.,22, 23) வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த உதவி மையம் செயல்பட உள்ளது. இந்திய தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின் படி 2026 ஜன.,1 தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடக்கிறது. ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெறும் பணிகள் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 ஓட்டுச் சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து திரும்ப பெறுவதற்காக நவ.,22, 23 (சனி, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களிலும் உதவி மையம் செயல்பட உள்ளது. பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை