மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
9 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (19.11.2025)
11 minutes ago
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
11 minutes ago
பரமக்குடி: பரமக்குடி ஒன்றியம் அண்டக்குடி ஊராட்சியில் வெங்கடேஸ்வரா காலனி உள்ளது. இங்குள்ள 90 வீடுகளில் நெசவாளர்கள் தறி கூடம் அமைத்து தொழில் செய்கின்றனர். அனைவரும் பஞ்சாயத்து குழாய்களில் வரும் தண்ணீரை மட்டுமே எதிர்பார்த்து வீடுகளின் புழக்கம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.இங்குள்ள குடிநீர் தொட்டியுடன் கூடிய ஆழ்குழாயில் தண்ணீர் வருவதில்லை. மேலும் காவிரி கூட்டு குடிநீர் ஒருநாள் விட்டு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் நிலையில் ஜல்ஜீவன் திட்டத்திலும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் தண்ணீர் வராத நிலையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறி குடிநீரும் விநியோகிக்கப்படாமல் உள்ளது. நெசவுத் தொழில் புரியும் முதியவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் அருகில் உள்ள நீர் நிலைகளை நாடி செல்லும் நிலை உள்ளது. இதனால் தொழில் பாதிப்பு, மாணவர்கள் நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். முதுகுளத்துார் ரோட்டோரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில் விபத்து அபாயமும் உள்ளது. எனவே நெசவாளர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக தண்ணீர் கிடைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 minutes ago
11 minutes ago
11 minutes ago