உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பண்ருட்டியில் இருந்து தர்பூசணி வரத்து அதிகம்

பண்ருட்டியில் இருந்து தர்பூசணி வரத்து அதிகம்

கீழக்கரை : -கடலுார், பண்ருட்டி, அரியலுார் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தர்பூசணி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் ராமநாதபுரத்திற்கு பண்ருட்டி தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது.வியாபாரிகள் மொத்தமாக ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தர்பூசணி பழங்களை சரக்கு வாகனங்களில் வாங்கி விற்பனை செய்கின்றனர். தர்பூசணி வியாபாரி முருகேசன் கூறியதாவது:கீழக்கரையில் பல ஆண்டுகளாக தர்பூசணி பழம் வியாபாரம் செய்கிறோம். தர்பூசணியின் தொடக்கநிலை வரத்து துவங்கியுள்ளதால் கிலோ ரூ.35க்கு விற்கிறோம். அதிக பருமனும் அதிக நீர்ச்சத்தும், சுவையும் கொண்டதாக இந்த தர்பூசணி உள்ளது.கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சுவைக்கும் பழமாக உள்ளதால் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தர்பூசணியை துண்டு களாகவும், அதனை சர்பத்தாகவும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை