மேலும் செய்திகள்
கியூ ஆர் கோடு வாயிலாக அரசு பஸ்களில் டிக்கட்
5 minutes ago
நாகூர் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழா
6 minutes ago
கோயில் கும்பாபிஷேகம்
11 minutes ago
17 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க அனுமதி
3 hour(s) ago
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மழை மற்றும் பனிப்பொழிவால்ஆண்டு தோறும் தொழில் பாதிப்பு ஏற்படும் நிலையில் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பரமக்குடி, எமனேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் பேர் நெசவுத் தொழிலை நம்பி உள்ளனர். இவர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் முதலாளிகளிடம் கச்சா பொருட்களை பெற்று காட்டன், பம்பர் மற்றும் பட்டு சேலைகளை நெய்கின்றனர். குறிப்பாக தெருவில் பாவு நீட்டுதல் துவங்கி, குடியிருக்கும் வீடுகளில் நெசவு பட்டறையை அமைத்து தொழில் செய்கின்றனர். அக்., துவங்கி ஜன., முடிய 4 மாதங்கள் மழை மற்றும் பனிப்பொழிவுகளால் நெசவுத்தொழில் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. அப்போது தெருவில் பாவு நீட்ட முடியாமல் உள்ளதுடன், அதிகப்படியான ஈரப்பதத்தால் நுால் இலைகள் துண்டாகி அறுந்து போகின்றன. இதனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு சேலை ரகங்களை பொறுத்து 100 முதல் 500 ரூபாய் கூலி பெறும் வகையில் பணி செய்யும் நிலையில் அதுவும் தடைபடுகிறது. ஆகவே மீன் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடி தடைக்காக மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது போன்று கைத்தறி நெசவாளர்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். பாரம்பரிய கைத்தறி நெசவை நம்பி உள்ள தொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 minutes ago
6 minutes ago
11 minutes ago
3 hour(s) ago