உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆடைகளால் அசுத்தமான சேதுக்கரை கடற்கரை சுத்தம் செய்யப்படுமா

ஆடைகளால் அசுத்தமான சேதுக்கரை கடற்கரை சுத்தம் செய்யப்படுமா

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே சேதுக்கரை கடற்கரையில் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் கழற்றி விட்ட ஆடைகள்அப்புறப்படுத்தப்படாததால் கடற்கரை அசுத்தமாககாணப்படுகிறது.ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியை அடுத்தசேதுக்கரை கடற்கரை உள்ளது. இங்குள்ள ஜெயவீரஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவருகின்றனர். சேதுக்கரை கடற்கரையில் திதி மற்றும் தர்ப்பணம்கொடுப்பதற்காக தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடற்கரையில் புனித நீராடி உடுத்திய ஆடைகளை கடலில் கழற்றி விடுவார்கள் இந்த துணிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் அடுத்து பக்தர்கள் புனித நீராடுவதற்கு உகந்ததாக இருக்கும். பலநாட்களாக ஆடைகளை அப்புறப்படுத்தாததால் கடற்கரை முழுவதும் அசுத்தமாக மாறியுள்ளது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவோர் முகம் சுளிக்கும் நிலைஉள்ளது. சேதுக்கரை கடற்கரையை முறையாக சுத்தமாக பராமரிக்க அங்குள்ள நிர்வாகம் முன் வர வேண்டும்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஜன 22, 2024 11:57

அண்ணாச்சி வந்துக்கிட்டே இருக்காரு. 2047 க்குள்ளாற சுத்தமாயிரும்.


நரேஷ்
ஜன 22, 2024 09:56

அழுக்கு கருபு வேட்டியை கட்டிக்கிட்டு வந்து ஆத்துல, கடலில் கழட்டி வுட்டா பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும்னு ஐதீகம். புதுசா பாவக்கணக்கை துவங்கலாமோல்லியோ


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை