| ADDED : நவ 18, 2025 03:57 AM
திருவாடானை: அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வருவோருக்கு காத்திருப்பு அறை இன்றி சிரமத்திற்குள்ளாகின்றனர். திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் இருந்து ஓரிக்கோட்டை செல்லும் வழியில் அனைத்து மகளிர் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. திருவாடானை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டினம் ஆகிய 5 ஸ்டேஷன்களில் இருந்து தினமும் வரதட்சணை கொடுமை, கணவன், மனைவியிடையே தகராறு, போக்சோ வழக்கு, உட்பட பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 40 கி.மீ.,க்கு மேல் வரும் முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் புகார் கொடுக்க வருபவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு காத்திருப்பு அறை இல்லாதால் மர நிழலில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே காத்திருப்பு அறை கட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.