உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தபால் சேவை குறித்த  புகார் அனுப்பலாம்

 தபால் சேவை குறித்த  புகார் அனுப்பலாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தபால் சேவை குறை தீர்க்கும் முகாமில் பங்கேற்க புகார் கடிதங்களை டிச.,15 க்குள் அனுப்ப வேண்டும் என கோட்டக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் அரண்மனை வளாகத்தில் உள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிச.,19 காலை 11:00 மணிக்கு நடைபெறும். இதில் பங்கேற்க தபால் சம்பந்தப்பட்ட புகார்களை டிச.,15க்குள் வை.தீத்தாரப்பன், கோட்டக் கண்காணிப்பாளர், தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், ராமநாதபுரம் அஞ்சல் கோட்டம், ராமநாதபுரம் -- 623 501' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மேல் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் - டிச.,2025' என குறிப்பிட்டிருக்க வேண்டும். புகாரை doramanathapuram.indiapost.gov.inஎனும் மின்னஞ்சலில் அனுப்பலாம். புகார் கடிதத்தில் அனுப்பியவர், பெறுபவரின் முகவரி, தபால் அனுப்பிய நாள், ரசீது எண், மணியார்டர், துரித தபால் விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, காப்பீடு குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம். ஏற்கனவே மனு கொடுத்து அதனால் திருப்தி அடையாதவர்கள் தங்களது குறைகளை மட்டும் அனுப்பி வைக்கலாம். புதிய புகார் மனு அளிக்க வேண்டாம். தனியார் கூரியரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை