உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துாய்மை பாரதம் வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிள் பிரசாரம்

துாய்மை பாரதம் வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிள் பிரசாரம்

ராமேஸ்வரம்; -துாய்மை பாரதம் வலியுறுத்தி வட மாநில இளைஞர்கள் மூன்று பேர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.துாய்மை பாரதம் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குஜராத், பீகார், ஜார்கண்ட் சேர்ந்த ராஜாராம் பாண்டே 34, முகேஷ்குமார் 36, விஜய் சேவாக் 37, ஆகியோர் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் பிரசார பயணம் செய்கின்றனர்.2023 செப்.15ல் தனித்தனியாக சைக்கிளில் பயணத்தை துவங்கி பீகார், ஜார்கண்ட், உ.பி., உத்தரகாண்ட், ராஜஸ்தான், ம.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா வழியாக 10 ஜோதிர்லிங்க தலத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு நேற்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்தனர்.இதன் பின் மீண்டும் தங்களின் சைக்கிள் பிரசாரத்தை துவக்கிய இளைஞர்கள் ஒடிசா பூரிஜெகநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஏப்., க்குள் பீகார் செல்ல முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை