உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

வாலாஜா, வாலாஜா அருகே, அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை வாலாஜா தாசில்தார் ஆனந்த் பறிமுதல் செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த கச்சால் நாயக்கர் தெருவை சேர்ந்தவர், அ.தி.மு.க., முன்னாள் வாலாஜா நகர மன்ற தலைவர் சுகன்யா மோகன். இவரது மகன் தனஞ்செழியன், 38. இவர், தீபாவளி பண்டிகயை முன்னிட்டு, வாலாஜா பகுதியில் ஜெயம் என்ற பட்டாசு கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனஞ்செழியன், பூரணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை எடுத்து, ஏராளமான பட்டாசுகளை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார். இது குறித்து வாலாஜா தாசில்தார் ஆனந்தனுக்கு வந்த தகவலின் படி, வருவாய்த்துறை ஊழியர்கள் குழு மற்றும், வாலாஜா போலீசார் உதவியோடு அப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் ஆய்வு செய்தார். அப்போது வீட்டில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.வாலாஜா தாலுகா போலீசார் வழக்கப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை, சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் பகுதியில் உள்ள பட்டாசு வெடிபொருள் குடோனிற்கு வருவாய்த்துறையினர் எடுத்து சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ