மேலும் செய்திகள்
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை ஆற்றில் மூழ்கி பலி
10-Nov-2025
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
05-Nov-2025
மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
09-Oct-2025
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பாலத்தில் டூ - வீலர் மீது கார் மோதிய விபத்தில், மூன்று வாலிபர்கள் உயிரிழந்தனர். வேலுார் மாவட்டம், ரங்காபுரத்தை சேர்ந்தவர் ஷாஜகான், 26; டிரைவர். ராணிப்பேட்டை மாவட்டம், காந்திநகரை சேர்ந்தவர் பாலமுருகன், 19; காரையை சேர்ந்தவர் தினேஷ், 20; நண்பர்களான மூவரும் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் டூ - வீலரில் வாலாஜாவில் இருந்து நவல்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ராணிப்பேட்டை, காரை புதிய ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றபோது, எதிரே வேகமாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கார், டூ - வீலர் மீது மோதியது. இதில், டூ - வீலரில் வந்த தினேஷ், பாலமுருகன் ஆகியோர் பாலத்தின் கீழே விழுந்தனர். ஷாஜகான் பாலத்திலேயே விழுந்தார். தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஷாஜகான் மற்றும் பாலமுருகனை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Nov-2025
05-Nov-2025
09-Oct-2025