உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்

ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்

சேலம்: தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சேலம், அஸ்தம்பட்டியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். அதில் நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் நகரமைப்பு ஆய்வாளர், அலுவலர்க-ளுக்கு பதவி உயர்வு வழங்குதல்; இடமாறுதல் கலந்தாய்வு அமைத்தல்; நகராட்சி பணி அமைப்பு போல் மாநகராட்சியிலும் மாநில அளவில் பணி மூப்பு பட்டியல் தயாரித்தல்; ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்த்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன. பொதுச்செயலர் நாகராஜன், கவுரவ ஆலோசகர் பழனிசாமி, சேலம் மண்டல தலைவர் ஜெயவர்மன், செயலர் இயற்கைபி-ரியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ