| ADDED : ஆக 20, 2024 03:16 AM
ஓமலுார்: தாரமங்கலம், ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கணேசன், 40. இவர் கடந்த, 3ல், ஓமலுார் அருகே பெரியேரிப்பட்டியில் உள்ள தன் பாட்டி பொன்னியம்மாளை, 85, காணவில்லை என தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். நகை, பணத்துக்காக மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.நேற்று இவ்வழக்கு தொடர்பாக, தொளசம்பட்டி பேராமரத்துாரை சேர்ந்த ராஜமுத்து மகன் சித்துராஜ், 30. மெக்கானிக், தாரமங்கலம், கருக்குப்பட்டியை சேர்ந்த அழகேசன் மகன் தனுஷ், 22. கூலிவேலை. தொளசம்பட்டி பெரியேரிப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து, 20. மெக்கானிக் ஆகிய மூவரை, சந்தேகத்தின் பேரில் தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து, ஓமலுார் டி.எஸ்.பி.,சஞ்சீவ்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.இது குறித்து போலீசார் கூறியதாவது: கணவர் இறந்த நிலையில் பொன்னியம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணமான ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். காணாமல் போன மூதாட்டி நகை மற்றும் பணத்துக்காக கொலை செய்து, உடலை வேறு பகுதியில் சென்று வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் மூவரிடம் விசாரித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.