உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கு நிதி போதாது ரூ.1 லட்சம் ஒதுக்க ஊராட்சி செயலர்கள் வேண்டுகோள்

மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கு நிதி போதாது ரூ.1 லட்சம் ஒதுக்க ஊராட்சி செயலர்கள் வேண்டுகோள்

சேலம் : மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட கூடுதல் செலவு ஏற்படுவதால், ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க ஊராட்சி செயலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழகத்தில், கடந்த 11ல் தொடங்கிய 2ம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் செப்., 15 வரை நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் 385 ஊராட்சிகளில், 16 நாட்களில், அதா-வது, ஆக.,8 வரை, 92 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதோடு சேர்ந்து தமிழகம் முழுவதும், 12,525 கிராம ஊராட்சி-களில் 2,500 முகாம்கள் நடத்தப்படுகின்றன. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, மின்வாரியம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, போலீஸ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்-டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை என மொத்தம், 15 துறைகள் முகாமில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன்மூலம், அதிகா-ரிகள் தேடிவந்து, மக்களுக்கான தேவை அறிந்து பூர்த்தி செய்ய, அரசின் சேவை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.முகாமுக்கு வருவோர், உரிய ஆவணங்களை கொண்டு வந்து கணினியில் பதிவு செய்ய, இ -சேவை மைய வசதி செய்யப்-பட்டு, இ-சேவை மையத்தை விட, பாதி கட்டணம் வசூலிக்கப்-பட்டு, பதிவு செய்யும்பணி மேற்கொள்ளப்படுகிறது. முகாம் நடத்த ஏதுவாக பந்தல் அமைத்தல், தரைவிரிப்பு, தற்காலிக கழி-வறை, குடிநீர் என பல்துறை அலுவலர்களுக்கான அடிப்படை வசதி, குறிப்பாக அவர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு ஊராட்சி பொது நிதியில் இருந்து, 25,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், முகாமை செம்மையாக நடத்தி முடிக்க ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது. அதை ஈடுகட்ட கடன் வாங்கி சமாளிப்பதாக ஊராட்சி செயலர்கள் புலம்புகின்றனர். எனவே, முகாம் செலவின நிதியை உயர்த்த வேண்டும் என, வேண்-டுகோள் விடுத்துள்ளனர்.தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநில தலைவர் ஜான்-போஸ்கோ பிரகாஷ் கூறுகையில், ''முகாமுக்கு, பல்துறை அலுவ-லர்கள், 200 -300 பேர் வருகை தருவதால், அவர்களுக்கான உணவு, கணினி உள்ளிட்ட எழுதுப்பொருட்கள் செலவு, மின் கட்-டணம், டேபுள்,சேர் வாடகை, பிளக்ஸ் போர்டு, ஆடியோ விளம்-பரம், ஸ்டேஜ் பேனர், துண்டறிக்கை என ஏகப்பட்ட செலவுகள் 'கை'யை கடிக்கின்றன.''இந்த உண்மை தெரிந்தும், மாவட்ட நிர்வாகம் மவுனமாக உள்ளது. அதனால், செலவின தொகையை, ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்-குனர் பொன்னையாவுக்கு மனு அனுப்பியுள்ளோம். எனவே, போர்க்கால அடிப்படையில் முகாம் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். இல்லையெனில், இனிவரும் காலங்களில் முகாம் ஏற்பாடு பெயரளவுக்கே இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி