உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 10வது தேசிய கைத்தறி தின விழா ரூ.1.25 கோடிக்கு நல உதவி வழங்கல்

10வது தேசிய கைத்தறி தின விழா ரூ.1.25 கோடிக்கு நல உதவி வழங்கல்

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டியில், 10வது தேசிய கைத்தறி தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து, 215 நெசவாளர்களுக்கு, 1.25 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:தேசிய கைத்தறி விழாவையொட்டி நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் பயன-டைந்துள்ளனர். அத்துடன் மூத்த நெசவாளர்கள் கவுரவிக்கப்-பட்டு, அரசு நலத்திட்டங்கள் தொடர்பான கையேடு வெளியிட்டு வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளிகளின் விற்பனை, கண்காட்சி அரங்குகள், மக்கள் பார்த்து பயனடையும்படி அமைக்கப்பட்டுள்ளது.கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்-தொகை, 82.16 லட்சம் ரூபாய், 117 பயனாளிகளுக்கு வழங்கப்-பட்டுள்ளன. முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்-பட, 215 பேருக்கு, 1.25 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உத-விகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மீராபாய், சேலம் சரக கைத்தறி துணை இயக்-குனர் ஸ்ரீதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை