உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாயால் விபத்து: தொழிலாளி பலி

நாயால் விபத்து: தொழிலாளி பலி

தலைவாசல் : தலைவாசல் அருகே தென்குமரையை சேர்ந்தவர் நல்லதுரை, 49. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை, 6:40 மணிக்கு, 'ராடன்' பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். முனியப்பன் கோவில் அருகே சென்றபோது, குறுக்கே வந்த நாய் மீது பைக் மோதி, சாலையோர தோட்டத்தில் இருந்த கோவிந்தன் மீது மோதியது.இதில் நல்லதுரை, 49, கோவிந்தன், 50, படுகாயம் அடைந்து ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, நல்லதுரை உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை