உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு

கெங்கவல்லி : கெங்கவல்லி, கணவாய்காட்டை சேர்ந்த சேகர் மனைவி சித்ரா, 48. இவரது மருமகள் அனிதா, 22. இவர்கள் நேற்று காலை, 8:00 மணிக்கு, கெங்கவல்லியில் உள்ள தனியார் மருத்துவம-னைக்கு சென்றனர். இரவு, 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 14 பவுன், 30,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது-குறித்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முன்னதாக, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், சம்பவ வீட்டில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை