உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்

100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம்

ஓமலுார் : ஓமலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்ரவர்த்தி அறிக்கை:நடப்பாண்டில் ஓமலுார் வட்டத்தில், 200 ஏக்கரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்துடனும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெரு விவசா-யிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. ஓமலுார் வட்டத்தில் உள்ள காய்கறி, பழப்பயிர், பூக்கள், மஞ்சள் விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விளை பொருட்-களின் உற்பத்தியை அதிகரித்து லாபம் பெற வேண்டும். விபரம் பெற, ஓமலுார் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை சந்தித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை