உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூலித் தொழிலாளியை தாக்கிய டிரைவர் கைது

கூலித் தொழிலாளியை தாக்கிய டிரைவர் கைது

கெங்கவல்லி: கூலித் தொழிலாளியை தாக்கிய லாரி டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.கெங்கவல்லி அருகே, மூலப்புதுார் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி மகன் கோபி, 29. கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த, திருப்பதி மகன் லாரி டிரைவர் பூமணிதாசன், 39, என்பவருக்கும் இடையே கடந்த, 16ல், தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த கோபி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபி அளித்த புகார்படி, பூமணிதாசன் மீது, தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை