உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் 10 டன் பூக்களால் அபிேஷகம்

மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் 10 டன் பூக்களால் அபிேஷகம்

சேலம் : சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதற்கு ஏராள-மான பக்தர்கள், 10 டன் அளவில் அரளி, சாமந்தி, ரோஜா உள்-ளிட்ட வாசனை மலர்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவிலில் சிறப்பு பூஜை, அர்ச்சனை நடந்தது. பின் மேளதாளம் முழங்க, தீபாராதனைக்கு பின் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள், கூடை கூடையாய், அம்மனுக்கு பூக்களை சமர்ப்பித்தனர். அந்த பூக்கள் அம்மன் மீது துாவி பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். வரும், 30ல் கம்பம் நடுதல், ஆக., 5ல் சக்தி அழைப்பு, 6ல் சக்தி கரகம், 7, 8, 9ல் பொங்கல், உருளுதண்டம், 11ல் சத்தாப-ரணம், 12ல் வசந்த உற்சவம் நடக்க உள்ளன. ஆக., 13ல் பால்-குட விழா மகா அபி ேஷகத்துடன் திருவிழா நிறைவு பெறும்.அதேபோல் தாரமங்கலம் சக்தி மாரியம்மன் கோவில் ஆடி திரு-விழாவுக்கு கம்பம் நடும் விழா நேற்று நடந்தது. ஏராளமான பக்-தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை