உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில்களில் வழிப்பறி வாலிபருக்கு குண்டாஸ்

ரயில்களில் வழிப்பறி வாலிபருக்கு குண்டாஸ்

சேலம்: ஒடிசாவை சேர்ந்தவர் பினாத் நாயக், 33. சேலம் ரயில்வே கோட்டத்தில் ஓடும் ரயில்களில், பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக, மே, 2 ல் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது தர்மபுரி, ஓசூர், ஈரோடு, கோவை ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளன.தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுள்ளதால், ரயில்வே எஸ்.பி., அன்பு பரிந்துரைப்படி, சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் பினாக் நாயக்கை கைது செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை