| ADDED : ஆக 21, 2024 01:44 AM
ராஜிவ் பிறந்தநாள்காங்., கொண்டாட்டம்சேலம், ஆக. 21-முன்னாள் பிரதமர் ராஜிவ், 80வது பிறந்தநாள் விழா, சேலம் மாநகர் காங்., அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். அதில் ராஜிவ் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. தொடர்ந்து ஊர்வலமாக புறப்பட்ட கட்சியினர், மத்திய கூட்டுறவு வங்கி அருகே உள்ள ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாநகர் பொருளாளர் ராஜகணபதி, செயலர் சீனிவாசன், வர்த்தக பிரிவு தலைவர் சுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.பைக் பேரணிஅதேபோல் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் காங்., கட்சியினர், தாரமங்கலம் அருகே கொண்டக்காரனுாரில் ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்டோர், தாரமங்கலம் வழியே பைக்கில் பேரணியாக கசுவரெட்டிப்பட்டி வரை வந்தனர். தொடர்ந்து அங்குள்ள ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.