உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

ஆத்துார் : ஆத்துார், மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜா, 50. கூலித் தொழிலாளியான இவர், கண்ணாடி மில் தெரு பகுதியை சேர்ந்த, விஸ்வநாதன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் சுவற்றில் தண்ணீர் அடித்துவிடும் வேலை செய்து வந்தார்.நேற்று மாலை, 5:00 மணியளவில் வீட்டின் சுவற்றில் தண்ணீர் அடிக்கச் சென்றபோது, படியில் இருந்து தவறி, 20 அடி பள்-ளத்தில் கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரி-ழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ