மேலும் செய்திகள்
திருவாசகம் முற்றோதல் விழா
05-Aug-2024
வீரபாண்டி, வளர்ந்து வரும் நாடான இந்தியா, தற்சார்பு நிலையுடன் வல்லரசாக விரைவில் மாற வேண்டி, வீரபாண்டி அங்காளம்மன் கோவிலில் நேற்று, அப்பகுதி மக்கள், சுற்றுவட்டார சிவனடியார்கள் ஒன்று கூடி காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை, 'திருவாசகம் முற்றோதல்' வேள்வி நடத்தினர். இதில், 50க்கும் மேற்பட்டோர், திருவாசகத்தை தொடர் பாராயணம் செய்தனர். நிறைவாக அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 5ம் ஆண்டாக சுதந்திர தினத்தில் திருவாசகம் முற்றோதல் வேள்வி நடந்ததாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
05-Aug-2024