உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 14 ஆடுகள் திருட்டு2 பேர் கைது

14 ஆடுகள் திருட்டு2 பேர் கைது

14 ஆடுகள் திருட்டு2 பேர் கைதுதாரமங்கலம்:தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி, புதுார் காடம்பட்டியை சேர்ந்தவர் சிவசாமி, 42. இவரது, 5 செம்மறி ஆடுகளை, கடந்த ஜன., 4 இரவு, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அதேபோல் பெரிய காடம்பட்டியை சேர்ந்த மாரியம்மாள், 70, என்பவரது, 5 ஆடுகள், ஜன., 21ல் திருடுபோனது. அதே பகுதியை சேர்ந்த சேட்டு, 46, என்பவரது, 4 ஆடுகள், பிப்., 3ல் திருடுபோனது. இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசார் விசாரித்து, நேற்று, 2 பேரை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:'சிசிடிவி' காட்சிகளை சோதனை செய்ததில், ஆம்னி வேனில் ஆடு திருடியது தெரிந்தது. அதன் பதிவெண்ணை வைத்து விசாரித்தோம். நேற்று காலை, தாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவில் பகுதியில் அந்த வேன் வந்தது. நிறுத்தி விசாரித்ததில், சின்னப்பம்பட்டி, சந்தைப்பேட்டையை சேர்ந்த தியாகராஜன், 45, என்பதும், ஆடு திருடியவர் என்பதும் தெரிந்தது. அவருடன் சேர்ந்து, சின்னப்பம்பட்டியை சேர்ந்த சக்திவேல், 25, என்பவரும் ஆடு திருடியது தெரிந்தது. இதனால், 2 பேரையும் கைது செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை