| ADDED : ஜூலை 28, 2024 03:44 AM
சத்தியமங்கலம்: சத்தி அருகே பிக்-அப் வேன் மீது கார் மோதியதில், கல்லுாரி மாணவர் மூவர் பலியாகினர்.ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் முகில் நிவாஸ், 22, கால்பந்து வீரர். இவருடைய நண்பர்கள்ரோஹித், 18, ஸ்ரீனிவாஸ், 17; மூவரும் சத்தியமங்கலம் தனியார் பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள். மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன், 22, தர்மேஷ், 19; இவர்கள் ஐந்து பேரும் ஈரோட்டிலிருந்து ஆசனுாருக்கு, ஹூண்டாய் வெர்னா காரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர். முகில் நிவாஸ் காரை ஓட்டினார்.சத்தியமங்கலம் அருகே வடவள்ளி முருகன் கோவில் மேடு பகு-தியில், எதிரே தக்காளி லோடு ஏற்றி வந்த பிக்-அப் வேன் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மோதியது. இதில் முகில் நிவாஸ் சம்பவ இடத்தில் பலியானார். தர்மேஷ், ரோகித் மருத்து-வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். ஸ்ரீனிவாஸ், சீனிவாசன் மற்றும் பிக்-அப் வேன் டிரைவரான, சேலம் மாவட்டம் கண்ணாமூச்சியை சேர்ந்த சிவக்குமார் பலத்த காயம-டைந்தனர். மூவரும் தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்க்-கப்பட்டனர். விபத்து குறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.