உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமி உட்பட 3 பேர் மாயம்

சிறுமி உட்பட 3 பேர் மாயம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர், 15 வயது சிறுமி, பிளஸ் 1 முடித்துள்ளார். கடந்த, 3ம் தேதி இரவு, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை ஓசூர் மகளிர் போலீசில், சூளகிரியை சேர்ந்த உதய், 23, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். மத்திகிரி மிடிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் ஸ்டான்சிங் குளோஸ் மகள் சலோத் மேரி, 22; தனியார் ஜூவல்லரி ஊழியர். கடந்த, 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் ராணி, 60, மிடிகிரிப்பள்ளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அமரேஷ், 35, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக மத்திகிரி போலீசில் புகார் கொடுத்தார்.தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 29. இவர் மனைவி தேஜஸ்வினி. தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.இதனால் தேஜஸ்வினி தன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றார். மனமுடைந்த வெங்கடேஷ் கடந்த, 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். போலீசார், வெங்கடேஷை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை