உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழி நடவு முறை கரும்பு சாகுபடி பயன் பெற்ற 40 விவசாயிகள்

குழி நடவு முறை கரும்பு சாகுபடி பயன் பெற்ற 40 விவசாயிகள்

பனமரத்துப்பட்டி: கரும்பு சாகுபடியில் குழி நடவு முறை குறித்து, தாசநாயக்கன்பட்-டியில் நேரடி செயல் விளக்கம் நேற்று அளிக்கப்பட்டது. பனமரத்-துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு தலைமை வகித்தார். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர் சுப்-புராஜ், குழி நடவு முறை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விளக்-கினார்.வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, பிரதம மந்திரி பயிர் காப்-பீட்டு திட்டம் குறித்தும், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும் விளக்கினர். கரும்பு அலுவலர் சுப்பிரமணி, வயலில் குழி நடவு முறை குறித்து, நேரடி செயல்விளக்கம் செய்து காட்டினார். உதவி வேளாண் அலுவலர் நத்தகுமார் உள்-ளிட்டோர் பங்கேற்றனர். இதன்மூலம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த, 40 விவசாயிகள் பயன் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை