சேலம்: தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தாக்கத்தால், சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு தொடங்கிய கன மழை விட்டுவிட்டு பெய்தது. பின் ஆங்காங்கே இடி, மின்ன-லுடன் நீடித்த மழை, விடிய விடிய கொட்டியது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சம் ஏற்காட்டில், 121.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.வீரகனுாரில், 114, சேலம், 83.4, ஆத்துார், 75, கெங்கவல்லி, 66, ஆணைமடுவு, 65, தம்மம்பட்டி, 64, கரியகோவில், 60, நத்தக்-கரை, 57, சங்ககிரி, 56, இடைப்பாடி, 23.4, டேனிஷ்பேட்டை, 22, ஓமலுார், 20, வாழப்பாடி, 8.3, மேட்டூர், 7.2, ஏத்தாப்பூர், 5 மி.மீ., மழை பெய்துள்ளது. தொடர் மழையால், சேலம் மாந-கரின் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கிய மழைநீர், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. காந்தி மைதானம், கிச்சிப்பாளையம் பிரதான சாலை, மழைநீரால் குளமாகவே மாறியது. அணைமேட்டில் இருந்து நுரை பொங்கிய-படி வெளியேறிய மழைநீர், திருமணிமுத்தாறில் கலந்து பெருக்-கெடுத்து ஓடியது. பச்சப்பட்டி, அசோக் நகர், ஆறுமுகம் நகர் பகு-திகளில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். மழைநீருடன் சாக்கடை கழிவு-நீரும் கலந்து வீட்டுக்குள் தேங்கி துர்நாற்றம் வீசியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் அரிசி, பருப்பு உள்-ளிட்ட உணவுப்பொருட்கள், உடைமைகளை பாதுகாக்க, விடிய விடிய துாக்கத்தை தொலைத்து மக்கள் அவதிப்பட்டனர். மழை நின்றதும் வீட்டில் தேங்கிய சாக்கடை கலந்த தண்ணீரை சிரமப்-பட்டு வெளியேற்றினர். மழை பெய்யும் போதெல்லாம் இப்பகு-தியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துவிடுகிறது. இப்-பிரச்னைக்கு தீர்வுகாண, மழைநீர் வடிகால்களை முறையாக துார்-வாரி பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 7:30 முதல் விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. முட்டல் ஏரிக்கும், 3 ஓடைகளில் இருந்து தண்ணீர் வருவதால், நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.மோட்டார் சேதம்பனமரத்துப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு, 9:00 முதல் அதிகாலை, 5:30 மணி வரை மழை பெய்தது. இதில் ஏரிச்-சாலை அருகே உள்ள விவசாயி ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான கிணற்றின் பக்கவாட்டு சுவர் சரிந்தது. கோம்பைக்காடு, தும்பல்-பட்டி, குள்ளப்பநாயக்கனுார், பெரமனுார் உள்ளிட்ட இடங்களில் வயலில் நிரம்பிய மழைநீரால், வரப்புகள் சேதமாகின.இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறியதாவது: மழைநீரால் சுவர் இடிந்து கிணற்றின் உள்ளே மண் விழுந்ததால் மின்மோட்டார் பழுதானது. கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை. மண் சரிவு ஏற்பட்ட இடம் அருகே உயர் மின் அழுத்த மின்சாரம் செல்லும் கம்பம் உள்ளது. தொடர் மழையால் மின் கம்பம் சரிந்து விழும் சூழல் உள்ளது. இதனால் கம்பத்தை இடமாற்ற, பனமரத்துப்பட்டி மின்வாரிய உதவி பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் தாராபுளி கரட்டில் இருந்து வரும் மழைநீர், கால்வாய் வழியே நத்தமேடு ஏரிக்கும் செல்லும். அந்த கால்வாய் ஆக்கிர-மிப்பால், மழைநீர் வயலில் தேங்கி பயிர் சேதமாகி, கிணற்று சுவர் சரிந்தது. மண்மூடி கிடக்கும் பாலம், கால்வாயை துார்வார, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பிளாஸ்டிக் கழிவு அகற்றம்ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே விடிய விடிய மழை பெய்தது. இதில் ராணிப்-பேட்டை சாலை, ஈ.வெ.ரா., சிலை முன் அதிகளவில் மழை நீர் தேங்கி நின்றது. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழை-நீருடன் கழிவுநீர் குளம் போல் நின்றது. இதனால் ஆத்துார் நக-ராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் தலைமையில் சுகாதார பிரிவு அலுவலர்கள் நேற்று, கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். கழிவுநீரை முழுமையாக அகற்ற முடியாததால் சாலை இருபுறமும் பள்ளம் தோண்டி, பூமிக்கு அடியில் செல்லும் கழிவு நீர் குழாயை சரிசெய்தனர். அப்போது அதிகளவில் பிளாஸ்டிக் கழிவு இருந்தது தெரியவந்தது. உடனே குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவை அப்புறப்படுத்-தினர். பின் கழிவுநீர் சென்றது.