உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாக்கியதில் படுகாயமடைந்த டிரைவர் பலி கள்ளக்காதலன் மீது கொலை வழக்குப்பதிவு

தாக்கியதில் படுகாயமடைந்த டிரைவர் பலி கள்ளக்காதலன் மீது கொலை வழக்குப்பதிவு

ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பொட்டியபுரம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி, 70. லாரி டிரைவர். இவ-ரது மனைவி ஜெயா, 50. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெயாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளி முருகன், 40, என்பவருக்கும், 'பழக்கம்' ஏற்பட்டுள்ளது. இதனால் முருகனை சந்திக்கக்கூடாது என, ஜெயாவை, ராமசாமி கண்டித்துள்ளார். இதுகுறித்து ஜெயா, முருகனிடம் தெரிவித்-துள்ளார். இதையடுத்து முருகன் கடந்த, 4 இரவு வீட்டின் வெளியே துாங்கிக்கொண்டிருந்த ராமசாமி தலையில், மரக்கட்-டையால் தாக்கினார். படுகாயம் அடைந்த ராமசாமி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஓமலுார் போலீசார் விசாரித்து, முருகனை கைது செய்தனர். நேற்று காலை, மருத்துவமனையில் ராமசாமி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி