| ADDED : ஜூன் 16, 2024 06:50 AM
ஓமலுார் : சேலம் மாநகரில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மே மாதத்தில் பெரியார் மேம்பாலம், சீலநாயக்கன்பட்டி, உத்தமசோழபுரம், பட்டர்பிளை மேம்பாலம் அருகே, கந்தம்பட்டி சர்வீஸ் சாலை, கருப்பூர் ரயில்வே மேம்பாலம் உள்பட, 13 பகுதிகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களில் விபத்துகளை தடுக்க, இரு நாட்களாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நேற்று முன்தினம் காலை, கருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் ஓமலுார் நோக்கி செல்லும் வழியில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அமுதா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரகுபதி, அறிவழகன், தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஜோதிபாஸ்கர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பிரதாப்சிங் ஆகியோர் கூட்டாய்வு செய்து, விபத்து ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க ஆலோசித்தனர்.