உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்ற அறிவுரை

தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்ற அறிவுரை

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நில மேம்பாடு குறித்து சேலம் வேளாண் இணை இயங்குனர் சிங்காரம், பாரப்பட்டி, தம்மநாயக்கன்பட்டி பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 'தரிசு நிலங்களை சீர் செய்து விளை நிலமாக மாற்ற, ஒரு ஹெக்டேருக்கு, 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சீர் செய்த நிலங்களில் பயிர் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படும்' என, விவசாயிகளிடம் தெரிவித்தார். மேலும் தரிசு நிலங்களை கண்டறிந்து விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க, வேளாண் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு, வேளாண் அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை