உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவியுடன் தொடர்பில் இருந்தவர் கணவர் மீது தாக்குதல்

மனைவியுடன் தொடர்பில் இருந்தவர் கணவர் மீது தாக்குதல்

ஓமலுார்:சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே பொட்டியபுரம் விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ராமசாமி, 70, லாரி டிரைவர். இவர் முதல் மனைவியை பிரிந்து, இரண்டாவதாக கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த ஜெயா, 50, என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.ஜெயாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத தறி தொழிலாளி முருகன், 40, என்பவருக்கும் இரு ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு முறையற்ற தொடர்பாக மாறியது. இதையறிந்த ராமசாமி, தன் மனைவியிடம் முருகனை சந்திக்கக் கூடாது என கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த முருகன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே துாங்கிக் கொண்டிருந்த ராமசாமியை, மரக்கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். பலத்த காயங்களுடன் ராமசாமி மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நேற்று முருகனை, ஓமலுார் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை