| ADDED : ஆக 21, 2024 01:42 AM
'பங்க்' ஊழியர் சடலம் மீட்புசேலம், ஆக. 21-தின்னப்பட்டி - டேனிஷ்பேட்டை இடையே ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் சடலமாக கிடந்தார். சேலம் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில் ஓமலுார், கொங்குபட்டியை சேர்ந்த சின்ன பையன் மகன் ஜானகிராமன், 20, என்பதும், காருவள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்ததும் தெரிந்தது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவர், சரக்கு ரயில் முன் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் விசாரணை நடக்கிறது' என்றனர்.