பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பழங்கள், பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. காரீப் பரு-வத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்ய, தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அதன்படி ஒரு ஏக்கர் சின்னவெங்காயகம் பயிருக்கு, 2,050 ரூபாய், தக்காளி, 1,017 ரூபாய் இம்மாதம், 31க்குள் பிரிமீயம் செலுத்த வேண்டும். ஒரு ஏக்கர் வாழைக்கு, 1,857 ரூபாய், மஞ்சள் பயிருக்கு, 3,215 ரூபாய் செப்., 16க்குள் பிரிமீயம் செலுத்த வேண்டும். விவசாயிகள் உழவன் செயலியில் பிரிமீயம் தொகை விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.வங்கி கணக்கு புத்தகம், ஆதார் நகல், சிட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், பொது சேவை மையம், கூட்-டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஆகியவைகளில் பிரி-மீயம் செலுத்தி, பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்-குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.