உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூட்டிய வீட்டில் இரும்பு கடைக்காரர் சடலமாக மீட்பு

பூட்டிய வீட்டில் இரும்பு கடைக்காரர் சடலமாக மீட்பு

சேலம்,;சேலம், திருவாக்கவுண்டனுார், பண்டக்கார வட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி, 58. அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்திருந்தார். அவரது இரு மனைவிகளும், கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற நிலையில், வாடகை வீட்டில் தனியே வசித்தார். கடந்த, 3 நாட்களாக, அவர் வீடு திறக்கப்படவில்லை. அவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. சூரமங்கலம் போலீசார் வந்து பூட்டியிருந்த வீட்டை திறந்தபோது, அழுகிய நிலையில் பாலாஜி சடலம் கிடப்பது தெரிந்தது. உடல் நலக்குறைவால் இறந்தாரா, வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி