உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் நாளை டிரோன் பறக்க தடை

சேலத்தில் நாளை டிரோன் பறக்க தடை

சேலம்:முதல்வர் ஸ்டாலின், ஊரக பகுதிகளுக்கு, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைக்க, நாளை தர்மபுரி வர உள்ளார். இதற்கு அன்று காலை, சென்னையில் விமானத்தில் புறப்பட்டு சேலம் விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதற்கு பின் சென்னை திரும்ப உள்ளார். அதனால் சேலம் மாவட்டத்தில், நாளை காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை, 'டிரோன்'கள் பறக்க தடை விதித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி