உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துப்பாக்கிகளை ஒப்படைக்க தேர்தல் அலுவலர் உத்தரவு

துப்பாக்கிகளை ஒப்படைக்க தேர்தல் அலுவலர் உத்தரவு

சேலம்;சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலவலர் பிருந்தாதேவி அறிக்கை:லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த, 16 முதல், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் குற்றவியல் நடைமுறை சட்டப்படி துப்பாக்கிகளை பொது இடங்களுக்கு எடுத்துச்செல்வது தண்டனைக்குரியது. சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற உரிமைதாரர்கள், அவரவர் துப்பாக்கியை, உடனே சம்பந்தபட்ட போலீசில் ஒப்படைத்து உரிய ரசீது பெற்று கொள்ள வேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்கு பின், துப்பாக்கிகளை திரும்ப பெற்று கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி